Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 14 April 2025
webdunia

பிரபல ஓடிடியில் விற்பனை ஆன ஜெயம் ரவியின் லேட்டஸ்ட் திரைப்படம்!

Advertiesment
ஜெயம் ரவி
, வியாழன், 23 பிப்ரவரி 2023 (16:10 IST)
ஜெயம் ரவி நடிப்பில் வடசென்னையில் நடக்கும் குத்துச் சண்டை போட்டிகளை மையமாக வைத்து உருவான திரைப்படம் பூலோகம். இந்த படத்தை எஸ் பி ஜனநாதனின் உதவியாளர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கி இருந்தார். இந்த படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து அதே கூட்டணி இரண்டாவது படத்தில் இணைந்துள்ளது. இந்த படத்துக்கு அகிலன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் கடற்கரை பகுதிகளில் அதிகளவில் படப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளதால் ஒரு புதிய சிக்கல் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். கடந்த ஆண்டே ரிலீஸ் ஆகவேண்டிய இந்த திரைப்படம் தாமதம் ஆகி வந்த நிலையில் இப்போது மார்ச் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தை முன்னர் பிப்ரவரியில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால் படத்தின் பெரும்பாலானக் காட்சிகள் கடலில் படமாக்கப்பட்டுள்ளதால் சில தடையில்லா சான்றிதழ்களை பெறவேண்டி இருந்ததால் ரிலீஸ் தாமதம் ஆகி வந்தது.

இந்நிலையில் இப்போது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் ஓடிடி உரிமையை முன்னணி ஓடிடி நிறுவனமான ஜி 5 நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜேம்ஸ் பாண்ட் பட நடிகை போல கண்களாலேயே மிரட்டும் ரகுல் ப்ரீத் சிங்- ரீசண்ட் புகைப்படங்கள்!