Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயம் ரவி & கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

ஜெயம் ரவி & கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!
, புதன், 22 பிப்ரவரி 2023 (15:14 IST)
ஜெயம் ரவி நடிப்பில் இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் அகிலன் திரைப்படமும் முடிந்து ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கு இடையில் ஜெயம் ரவி கீர்த்தி சுரேஷோடு சைரன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். மேலும் அனுபமா பரமேஸ்வரனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த திரைப்படத்தை அவரது மாமியார் சுஜாதா தயாரித்து வருகிறார். இந்த படத்தை ஆண்டனி பாக்கியராஜ் என்பவர் இயக்க இருப்பதாகவும் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சைலண்ட்டாக இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகளை ஆண்டனி படமாக்கி விட்டதாகவும், விரைவில் மொத்த ஷூட்டிங்கும் முடிய உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை மாளவிகா மோகனின் வசீகரப் புகைப்படங்கள்!