Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளிக்கு முன்பே ரிலீஸாகிறதா ‘ஜனநாயகன்’ முதல் சிங்கிள் பாடல்!

vinoth
புதன், 24 செப்டம்பர் 2025 (09:29 IST)
GOAT படத்துக்குப் பிறகு விஜய், ஹெச் வினோத் இயக்கும் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் முடிந்ததும் அவர் சினிமாவை விட்டு முழு நேர அரசியலுக்கு செல்லவுள்ளார். அதனால் படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். KVN புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க முக்கிய வேடங்களில் மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கடந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கிய நிலையில் பெரும்பாலானக் காட்சிகள் சென்னை பனையூரில் உள்ள ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது. அடுத்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு இந்த படத்தின் முதல் பாடலான ‘one last dance’ பாடல் ரிலீஸாகும் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி தீபாவளிக்கு முன்பாக அக்டோபர் முதல் வாரத்திலேயே அந்த பாடல் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பெற்றோராகப் போகும் காத்ரீனா கைஃப்- விக்கி கௌஷல் தம்பதி… ரசிகர்கள் வாழ்த்து!

என்னிடம் கற்றல் மனப்பாண்மை இல்லை… மனம் திறந்து பேசிய நடிகர் சாந்தணு!

அஜித்- தில்ராஜு தரப்பு திடீர் சந்திப்பு… சம்பள விஷயத்தால் எழுந்த சிக்கல்!

"சரீரம்" திரைவிமர்சனம்!

ஸ்பைடர்மேன் ஷூட்டிங்கில் விபத்து! மருத்துவமனையில் டாம் ஹாலண்ட்! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments