Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என் தலைவர பத்தி தப்பா பேசுவியா?!.. ரோட்டில் உருண்டு புரண்ட திமுக, தவெக தொண்டர்கள்

Advertiesment
DMK

Bala

, திங்கள், 24 நவம்பர் 2025 (13:26 IST)
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையேதான் போட்டி என விஜய் தொடர்ந்து சொல்லி வருகிறார். எனவே, திமுக ஆதரவாளர்கள் விஜயை தொடந்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில்தான் தவெக தொண்டரும், திமுக தொண்டரும் கட்டிப்புரண்டு சண்டை போட்ட சம்பவம் நடந்திருக்கிறது.

 
மதுரவாயல் பகுதியை சேர்ந்த சமீர் முதலில் தவெகவில் உறுப்பினராக இருந்த நிலையில் கடந்த 16ம் தேதி அந்த கட்சியிலிருந்து விலகி திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அப்போது தவெக உறுப்பினர் படிவம் மற்றும் அடையாள அட்டையை எரித்ததோடு அதை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். எனவே, தவெகவினர் கோபமடைந்து இவரை திட்டி வருகிறார்கள்.
 
அதோடு அவரின் பகுதியை சேர்ந்த தவெகவினருக்கும் இவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சமீபத்தில் தவெகவை மீண்டும் விமர்சித்து ஒரு வீடியோவை வெளியிட்டார். இதில் கோபமடைந்த தவெகவினர் சமீரின் வீட்டிற்கு சென்று ‘எங்க தலைவரை பற்றி நீ எப்படி தப்பா பேசலாம்?’ எனக்கேட்டு அவரிடம் வாக்குவாதம் செய்தனர். ஒருகட்டத்தில் அது சண்டையாக மாறி கைகலப்பில் முடிந்தது. எனவே, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு சாலையில் உருண்டனர்.
 
இதைப்பார்த்து சமீரின் வீட்டு உரிமையாளர் ரமேஷ் இரு தரப்பையும் விலக்கி விட முயற்சி செய்துள்ளார். அப்போது ஒருவர் அவரின் முகத்தில் குத்திவிட மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. அதன்பின் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். காயமடைந்த ரமேஷ் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெல்லியில் காற்று மாசை கண்டித்து போராட்டம்.. காவல்துறையினர் மீத் பெப்பர் ஸ்ப்ரே அடித்ததால் பரபரப்பு..!