Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 14 April 2025
webdunia

ஜெயிலர் 2 விலும் மோகன் லால் & சிவராஜ் குமார் இருக்கிறார்களா?

Advertiesment
#Kaavaalaa

vinoth

, புதன், 4 செப்டம்பர் 2024 (09:02 IST)
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரஜினிகாந்த், மோகன் லால், சிவராஜ் குமார், விநாயகன் மற்றும் தமன்னா ஆகியோர் நடித்த ஜெயிலர் படம் ரிலீஸாகி பெருவெற்றி பெற்றது. படத்தின் விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும், வசூலில் கலக்கி 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இதனால் உடனடியாக ஜெயிலர் 2 உருவாகும் என தகவல்கள் பரவின.

ரஜினியும் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததாக சொல்லப்பட்டது.  இப்போது ரஜினி வேட்டையன் மற்றும் லோகேஷ் இயக்கும் ரஜினி 171 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதன் பிறகு ஜெயிலர் 2 தொடங்கும் என சொல்லப்பட்டது. அதையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கும் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் ஜெயிலர் படத்தில் முக்கிய வேடத்தில் மோகன்லால் மற்றும் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்திருந்தனர். அந்த பாத்திரங்களுக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து இரண்டாம் பாகத்திலும் அவர்களின் கதாபாத்திரத்தை நீட்டிக்க நெல்சன் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீபாவளி ரிலீஸும் இல்லையா…? சூர்யாவின் கங்குவா எப்பதான் வரும்?