Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயிலர் 2 படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிரபல நடிகர்!

ஜெயிலர் 2 படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிரபல நடிகர்!

vinoth

, புதன், 31 ஜூலை 2024 (14:07 IST)
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரஜினிகாந்த், மோகன் லால், சிவராஜ் குமார், விநாயகன் மற்றும் தமன்னா ஆகியோர் நடித்த ஜெயிலர் படம் ரிலீஸாகி பெருவெற்றி பெற்றது. படத்தின் விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும், வசூலில் கலக்கி 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இதனால் உடனடியாக ஜெயிலர் 2 உருவாகும் என தகவல்கள் பரவின.

ரஜினியும் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததாக சொல்லப்பட்டது.  இப்போது ரஜினி வேட்டையன் மற்றும் லோகேஷ் இயக்கும் ரஜினி 171 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதன் பிறகு ஜெயிலர் 2 தொடங்கும் என சொல்லப்பட்டது. அதையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கும் என சொல்லப்பட்டது.

ஆனால் இதுவரை இதுபற்றி எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.  இந்நிலையில் ஜெயிலர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த யோகி பாபு இரண்டாம் பாகத்திலும் தான் நடிக்க உள்ளதாக ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். மேலும் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குனர் நெல்சன் வெளியிடுவார் என்றும் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேட்டையன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படுகிறதா?