Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீபாவளி ரிலீஸும் இல்லையா…? சூர்யாவின் கங்குவா எப்பதான் வரும்?

தீபாவளி ரிலீஸும் இல்லையா…? சூர்யாவின் கங்குவா எப்பதான் வரும்?

vinoth

, புதன், 4 செப்டம்பர் 2024 (08:57 IST)
சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாகி வரும்  கங்குவா படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் பாபி தியோல், திஷா பதானி, கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.படம் 10 மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் ரிலீஸ் அக்டோபர் 10 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே தேதியில் வேட்டையன் ரிலீஸாவது உறுதியாகியுள்ளது. இதனால் கங்குவா தள்ளிப் போவதை சூர்யா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

இதனால் கங்குவா தீபாவளிக்கு ரிலீஸாகும் என சொல்லப்பட்ட நிலையில் தற்போது நவம்பர் மாதத்துக்குத் தள்ளிப் போகவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் தீபாவளிக்கு ஏற்கனவே 3 படங்கள் ரிலீஸாவதால் போதுமான தியேட்டர்கள் கிடைக்காது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தக் லைஃப் ஷூட்டிங் நிறைவு எப்போது… வெளியான தகவல்!