Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தளபதி 67 LCU-ல் இல்லையா? – போஸ்டர் பார்த்து ரசிகர்கள் ஏமாற்றம்!

தளபதி 67 LCU-ல் இல்லையா? – போஸ்டர் பார்த்து ரசிகர்கள் ஏமாற்றம்!
, செவ்வாய், 31 ஜனவரி 2023 (14:56 IST)
லோகேஷ் இயக்கிய விக்ரம் படத்தின் வெற்றி அவர் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக ஏற்றியுள்ளது. விக்ரம் படத்துக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்து விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை இயக்க உள்ளார்.

இந்த படமும் ஒரு மல்டிஸ்டார் படமாகவே உருவாக உள்ளது. இந்நிலையில் விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு பேசிய லோகேஷ் இனிமேல் நான் இயக்கும் படங்கள் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸாக இருக்கும்போது போஸ்டரில் “LCU” என இடம்பெறும் என கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று இந்த படத்தின் அறிவிப்பு போஸ்டர் ரிலீஸ் ஆன நிலையில் அதில் “LCU” இடம்பெறவில்லை. அதனால் மாஸ்டர் போல இந்த படம் ஒரு தனிக்கதையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜயகாந்த் கைப்பற்றி அன்பு முத்தம்… எமோஷன் ஆன SAC