Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று 'தளபதி 67’ படத்தின் அறிவிப்பு: தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வ தகவல்

thalapathi
, திங்கள், 30 ஜனவரி 2023 (16:40 IST)
தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ’தளபதி 67’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று மாலை 6.07 மணிக்கு தளபதி 67 படத்தின் அறிவிப்பு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
தளபதி 67 படத்தை தயாரித்து வரும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று நாளை 6:07 படத்தின் அப்டேட் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் இந்த அப்டேட்டை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தளபதி 67 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்துள்ள நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படிப்பு கொடைக்கானலில் நடந்து வருகிறது. இதனை அடுத்து மூன்றாம் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற இருப்பதாகவும் இதில் விஜய் சஞ்சய் தத் உள்பட பலர் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை அதிதிராவின் முன்னாள் கணவருக்கு திருமணம்!