நடிகர் சிம்புவை வைத்து இரண்டு படங்களை தயாரிக்க தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஒப்பந்தம் செய்தார். அதில் முதல்படமாக வெந்து தணிந்தது காடு என்ற படம் ரிலீஸானது.
இந்நிலையில் இரண்டாவது படமாக கொரோனா குமார் என்ற படம் உருவாகும் என்று சொல்லப்பட்டது. இதை இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பட இயக்குனர் கோகுல் இயக்க இருந்தார். ஆனால் இப்போது அந்த படத்தில் சிம்பு வெளியேறி, லவ் டுடே புகழ் பிரதீப் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இயக்குனர் கோகுல் கொரோனா குமார் திரைப்படம் பற்றி பேசியுள்ளார். அதில் “இந்த படத்தை பற்றி நிறைய தகவல்கள் பரவி வருகின்றன. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவில்லை. படம் ட்ராப்பா அல்லது இல்லையா என்பதை நான்தான் அறிவிப்பேன். விரைவில் இந்த படம் குறித்து அறிவிப்பேன்” எனக் கூறியுள்ளார்.