ஈஸ்வரன் திரைப்படத்தை பொங்கலுக்கு நிச்சயம் வெளியிடுவோம் என தயாரிப்பு தரப்பு தகவல்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முழுவதும் நீங்காத நிலையில் மாஸ்டர், ஈஸ்வரன் உள்ளிட்ட படங்கல் வெளியாவதால் திரையரங்குகளில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் இதனால் தொற்று பரவும் அபாயம் அதிகரிக்கும் என மருத்துவர்கள் கூறி வரும் நிலையில் அரசின் உத்தரவை திரும்ப பெற கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் ”100% சதவீதம் பார்வையாளர்களுக்கான அனுமதி திரும்ப பெறப்பட்டால் மாஸ்டர் படம் மட்டுமே திரையிடப்படும். மாஸ்டர் படம் வெளியிடப்படவில்லை என்றால் மட்டுமே ஈஸ்வரன் படத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்” என கூறியுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து ஈஸ்வரன் படத்தின் தயாரிப்பு நிறுவனம், சிலம்பரசன் நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படத்தை பொங்கலுக்கு நிச்சயம் வெளியிடுவோம். ஈஸ்வரன் திரைப்படத்திற்காக இதுவரை 200 தியேட்டர்களை ஒப்பந்தம் செய்து வைத்துள்ளோம் என கூறியுள்ளனர்.