ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படம்தான் கமலுடைய சினிமா வாழ்வில் கடைசி படமாக இருக்கும் என்றெல்லாம் தெரிவிக்கப்பட்டது. இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் படத்திற்கான பூஜை போடப்பட்ட சிலநாட்களில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் கமலின் மேக்கப் விஷயத்தில் ஷங்கருக்கு திருப்தி இல்லை என்று தெரிகிறது. அதற்காக அமெரிக்கா சென்ற ஷங்கர் அங்குள்ள பிரசித்தி பெற்ற மேக்கப் கலைஞர்களுடன் ஆலோசித்து கமலுக்கு மேக்கப் எடுத்ததாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் ஏற்கனவே லைக்கா நிறுவனம் தயாரித்து ரஜினி நடிப்பில் வெளியான 2.0 படத்தைப்போல இந்தியன் 2 வுக்கும் ஷங்கரின் பட்ஜெட் அதிகமாகலாம் என்று நினைத்து தற்போது லைக்கா இந்தப் படத்தை தயாரிக்க அரை மனநிலையுடன் தான் இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே மேக்கப்பில் திருப்தி இல்லாத தயாரிப்பு நிறுவனம் குறுகிய பட்ஜெட்டில் படம் எடுக்க வலியுறுத்தினால் ஷங்கர் படத்தை கைவிடவும் வாய்புள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.