பிரபல இயக்குனருடன் கைகோர்த்த ஜி.வி.பிரகாஷ்! சிரிப்புக்கு கியாரண்டி

ஞாயிறு, 17 பிப்ரவரி 2019 (09:23 IST)
இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிவிட்ட ஜி.வி.பிரகாஷ் அடுத்ததாக பிரபல காமெடி பட இயக்குனர் எழிலின் படத்தில் நடிக்க உள்ளார்.
அபிஷேக் பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக   நடிக்க உள்ளார்.  
 
இந்த படத்தின் துவக்க விழா எளிமையாக கோவில் ஒன்றில் நடைபெற்றது. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்தும் உருவாகும் இப்படத்தில் காமெடி நடிகராக யாரை பிடிப்பது மற்றும் நடிகர் நடிகைகள்  தேர்வை படக்குழு தீவிரமாக நடத்தி வருகிறது. தற்போது வந்துள்ள தகவல் படி எழிலின் இப்படத்துக்கு சி.சத்யா இசையமைக்கிறார். மார்ச்சில் படப்பிடிப்பை துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ரஜினி பட வசனத்தை விளம்பரத்திற்கு பயன்படுத்திய ஆஸ்திரேலியா போலீஸ்