Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தல 59 படம் குறித்து முக்கிய அப்டேட்

தல 59 படம் குறித்து முக்கிய அப்டேட்
, திங்கள், 18 பிப்ரவரி 2019 (18:49 IST)
தல அஜித் அமிதாப் நடித்த பிங்க் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் நகரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.



இதற்காக இயக்குனர் வினோத் தலைமையில் படக்குழுவினர் அங்கு முகாமிட்டுள்ளனர்.  இந்த படத்தை வரும் மே 1ம்தேதி அஜித் பிறந்த நாளுக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டு பணியாற்றி வருகிறார்கள். இந்த படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். தல 59 படத்தில் மொத்தம் 4 பாடல்கள் உருவாக்கப்படுகிறது. இதில் இரண்டு பாடல் தீம் மியூசிக் என்று சொல்கிறார்கள். ஒரு பாடலுக்கு யுவன் இசையமைத்து முடித்துவிட்டார். மற்றொரு பாடலுக்கு  இசை அமைக்க ஆரம்பித்து விட்டார்.
 
ஶ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரித்து வருகிறார். வித்யா பாலன் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார். நடிகை ஷ்ரத்தா ஶ்ரீநாத், அர்ஜுன் சிதம்பரம், ஆதிக் ரவிச்சந்திரன், பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தரம் தாழ்த்திப் பேசுறது நியாயம் இல்லை: பொங்கிய ரவிமரியா