கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இதற்கிடையில் ஷங்கர் தற்போது ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் நடிக்கும் “RC 15” படத்தையும் இயக்கி வருகிறார். வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுதான் இந்த படத்தையும் தயாரித்து வருகிறார். இந்நிலையில் இப்போது வாரிசு படம் ரிலிஸுக்கு தயாராகி வருவதால், ரிலீஸ் வரைக்கும் ஷங்கர் – ராம்சரண் படத்துக்கு பிரேக் விட்டுள்ளாராம் தில் ராஜு. இதனால் ஷங்கர் விருவிருப்பாக இந்தியன் 2 படத்தை முடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பொங்கலுக்குப் பிறகு இந்தியன் 2 ஷூட்டிங் மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதன் படி இந்த வாரத்தில் திருப்பதியில் முக்கியக் காட்சிகளை பிரம்மாண்ட செட்டில் படமாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியன் 2 படத்தின் மீதமுள்ள ஷூட்டிங் 50 நாட்கள் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஏப்ரல் மாதத்துக்குள் படத்தின் மொத்த ஷூட்டிங்கும் முடியும் என்று சொல்லப்படுகிறது.