நடிகர் ரஜினியின் பூத் கமிட்டி உறுப்பினர்கள் பட்டியல் தயாரிப்பதற்காக ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், வரும் டிசம்பர் 25 ஆம் தேதிக்கும் பட்டியலை சம்ப்பிக்குமாறு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்குத் தலைமை உத்தரவிட்டுள்ளது.
ரஜினிகாந்த் சமீபத்தில் அரசியல் கட்சியில் தொடங்கி அரசியலில் ஈடுபடுவதை உறுதி செய்தார். டிசம்பர் 31 ஆம் தேதி அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிப்பேன் என்றும் வரும் தேர்தலில் தனது கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என்றும் கூறினார்.
மேலும் ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனா மூர்த்தி அவர்களும் தலைமை ஆலோசகராக தமிழருவி மணியன் அவர்களையும் அவர் நியமனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது, பூத் கமிட்டி போன்றவற்றிற்கு நிர்வாகிகளை நியமிக்கும் போது பணம் பெற்றால் கட்சியில் இருந்து நீக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நடிகர் ரஜினியின் பூத் கமிட்டி உறுப்பினர்கள் பட்டியல் தயாரிப்பதற்காக ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், வரும் டிசம்பர் 25 ஆம் தேதிக்கும் பட்டியலை சம்ப்பிக்குமாறு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்குத் தலைமை உத்தரவிட்டுள்ளது.
ரஜினியின் வேகத்தால் மற்ற அரசியல் கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன.