Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 13 January 2025
webdunia

’’பிக்பாஸ் டைட்டில் வின்னர்’’ யார்?? நடிகர் கமல்ஹாசன் சூசகம்! வைரல் வீடியோ

Advertiesment
’’பிக்பாஸ் டைட்டில் வின்னர்’’ யார்?? நடிகர் கமல்ஹாசன் சூசகம்! வைரல் வீடியோ
, சனி, 19 டிசம்பர் 2020 (17:52 IST)
தமிழகத்தில் மிகப்பொழுதுபொக்கு அம்சமாக மக்களால் பார்க்கப்படுவது பிக்பாஸ். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 –ன் வெற்றியாளர் யார் என்று நடிகர் கமல்ஹாசன் மறைமுகமாகத் தெரிவித்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 4 நிகச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். 76 வது நாளாக நடைபெறும் இன்றைய நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தோன்றவுள்ளார் என்பதால் இதுகுறித்த புரோமோ வெளியாகியுள்ளது.

இதில் நடிகர் கமல்ஹாசன் பேசும்போது,  இன்னும் 31 நாட்கள் மட்டுமே உள்ளது வெற்றியாளர் யார் என்பதை நீங்கள் தீர்மானிக்க.. மேலும் வீட்டினுள் பிரதிநிதிகள் சிறப்பாக விளையாடுகிறார்களா என்பதை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். எனவே மக்கள் யாரை வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்க உள்ளனர் என்பத் இந்த வாரத்தில் தெரிய ஆரம்பிக்கும் என்று கூறி,  ரம்யா,ஆரி, ரியோ ஆகிய மூவரின் முகங்களும் புரோமோவில் காட்டப்பட்டுள்ளதால் இவர்களில் ஒருவர்தான் இந்த சீசனில் வெற்றியாளராக தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளது என மறைமுகமாக கமல் தெரிவிக்கிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி சூடுபிடித்துள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் கமல்ஹாசன் தடம் தெரியாமல் போய்விடுவார் - அமைச்சர் கடம்பூர் ராஜூ