Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோடிகளைக் குவித்த...தனுஷின் படம் சிறந்த படமாகத் தேர்வு….ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி!

கோடிகளைக் குவித்த...தனுஷின் படம் சிறந்த படமாகத் தேர்வு….ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி!
, சனி, 19 டிசம்பர் 2020 (15:16 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான படம் அசுரன். இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். இப்படம் ரூ.100 கோடி வசூல் செய்ததாக தகவல்கள் வெளியானது.

அசுரன் படத்தை பல்வேறு அரசியல் தலைவர்களும் பார்த்தனர். இதன் வெற்றி தெலுங்கிலும் ரீமேக் ஆகிறது. அங்கு வெங்கடேஷ் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இன்று கோவாவில் சர்வதேசத் திரைப்பட விழா தொடங்கியது. இதில் தனுஷின் அசுரன், தேன் உள்ளிட்ட  சிறந்த படங்கள் திரையிடப்பட்டன.

தற்போது மத்திய அரசின் 2020 ஆண்டிற்காக பனோரமா திரைப்பட விருதுகளுக்கு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த  அசுரன் படம் தேர்வாகியுள்ளது.
இதனால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐட்டம் பாடலுக்கு செம ஆட்டம் போட்ட பிக்பாஸ் ரியோ - ரெண்டிங் வீடியோ இதோ!