Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர்மேன்லாம் பார்ட் வருது.. இசை வரக்கூடாதா..? – இளையராஜாவின் புதிய ஆல்பம்!

Webdunia
ஞாயிறு, 20 பிப்ரவரி 2022 (14:47 IST)
இளையராஜாவின் முந்தைய ஆல்பமான “ஹவ் டூ நேம் இட்?”ன் இரண்டாவது பாகம் குறித்த அப்டேட்டை இளையராஜா தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

கடந்த பல தசாப்தங்களாக தமிழ், இந்தி, தெலுங்கு என பல இந்திய மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளவர் இசைஞானி இளையராஜா. திரைப்பட இசை மட்டுமல்லாது ஆல்பமாக தனியாக சில இசை ஆல்பங்களையும் இளையராஜா வெளியிட்டுள்ளார். அவற்றில் பிரபலமானது 1986ல் வெளிவந்த “ஹவ் டூ நேம் இட்” என்ற ஆல்பம்.

இந்நிலையில் தற்போது ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள இளையராஜா “சூப்பர்மேன், பேட்மேன் போன்ற படங்கள் எல்லாம் பார்ட் 1 பார்ட் 2 என வரும்போது இசை அப்படி பார்ட்டாக வரக் கூடாதா! அதற்குதான் வருகிறது ஹவ் டூ நேம் இட் பார்ட் 2” என தெரிவித்துள்ளார். இளையராஜாவின் புதிய ஆல்பம் குறித்த இந்த அறிவிப்பு இசை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் ஸ்டைலிஷான லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லியோ, ஜெயிலர் & விக்ரம் ஹிட்… சினிமாவை விட்டே போயிடலாம்னு நெனச்சேன் -இயக்குனர் பாண்டிராஜ்!

கிங்டம்: கலவையான விமர்சனங்கள் இருந்தும் முதல் நாளில் அசத்தல் வசூல்!

‘கைதி 2’ படத்துக்கும் ‘லியோ’வுக்கும் இருக்கும் தொடர்பு… லோகேஷ் பகிர்ந்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments