Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஜித் சுற்றுப்பயணம் செய்த பைக்கில் இன்சூரன்ஸ் காலாவதியானதா?

அஜித் சுற்றுப்பயணம் செய்த பைக்கில் இன்சூரன்ஸ் காலாவதியானதா?
, சனி, 19 பிப்ரவரி 2022 (22:53 IST)
நடிகர் அஜித் சமீபத்தில்  பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட  நிலையில் அந்த பைக்கின் இன்சூரன்ஸ் காலாவதியாகிவிட்டதாக தகவல் வெளியாகிறது.

நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படம் கொரோனா காரணமாக பல ஆண்டுகளாக படப்பிடிப்பில் இருந்து வந்த நிலையில் தற்போது முழு பணிகளும் முடிந்து வரும் 24 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக ரஷ்யா சென்றிருந்தபோது அங்கு நடிகர் அஜித் பைக்கிலேயே 5 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்ததாக தகவல்கள் வெளியானது.

இ ந் நிலையில் தற்போது,  அஜித் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பைக்கின் இன்சூரன்ஸ் கடந்த 2020 ஆம் ஆண்டிலேயே முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகிறது. ஆனால், இன்சூரன்ஸ் இல்லாமல் அவர் எப்படி பல நாடுகளுக்குச் சென்றிருக்க முடியும் என அஜித் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் அர்ஜூனின் மாமனார் காலமானார் !