தமிழ்நாட்டில் அறிமுகம் தேவையில்லாத நபர்களில் ஒருவர் இசையமைப்பாளர் இளையராஜா. லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரையும், அவரது பாடல்களையும் தங்கள் மூச்சுக்காற்றாகவே நினைத்து வருகின்றனர். தன்னுடைய 82 ஆவது வயதிலும் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டும் உலகம் முழுவதும் சுற்றி வந்து இசைக் கச்சேரிகள் செய்வது என்றும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்னர் தான் சிம்பொனி ஒன்றை உருவாக்கி வருவதாக இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். valiant எனப் பெயரிடப்பட்டுள்ள அவரின் முதல் சிம்பொனியை சமீபத்தில் பதிவு செய்தார். அந்த சிம்ஃபொஇனியை இசைக் கலைஞர்களோடு அவர் ஒத்திகைகள் பார்த்த வீடியோ இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில் இன்று அவரின் முதல் சிம்ஃபொனி லண்டனில் உள்ள அப்பொல்லோ அரங்கில் நிகழ்த்தப்பட உள்ளது. முதல் முதலாக சிம்ஃபொனி வடிவிலான இசைத் தொகுப்பை வெளியிடும் இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமையை இளையராஜா இதன் மூலம் பெறுகிறார்.