Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் காப்பி அடித்தேனா?... உலகத்தின் இசைகளை எல்லாம் உங்களுக்கு அறிமுகப்படுத்தினேன்… இளையராஜா ஆவேசம்!

Advertiesment
நான் காப்பி அடித்தேனா?... உலகத்தின் இசைகளை எல்லாம் உங்களுக்கு அறிமுகப்படுத்தினேன்… இளையராஜா ஆவேசம்!

vinoth

, திங்கள், 3 பிப்ரவரி 2025 (09:06 IST)
தமிழ் சினிமாவில் அறிமுகம் தேவையில்லாதவர்களில் ஒருவர் இசையமைப்பாளர் இளையராஜா. லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரையும், அவரது பாடல்களையும் தங்கள் மூச்சுக்காற்றாகவே நினைத்து வருகின்றனர். தன்னுடைய 82 ஆவது வயதிலும் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டும் உலகம் முழுவதும் சுற்றி வந்து இசைக் கச்சேரிகள் செய்வது என்றும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் தான் சிம்பொனி ஒன்றை உருவாக்கி வருவதாக இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். ’valiant’ எனப் பெயரிடப்பட்டுள்ள அவரின் முதல் சிம்பொனியை சமீபத்தில் பதிவு செய்துள்ளார். இது இசைக் கலைஞர்களோடு அவர் ஒத்திகைகள் பார்த்த வீடியோ இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றது. விரைவில் இந்த சிம்பொனி இசை கச்சேரி லண்டனில் உள்ள ஒரு இசையரங்கில் நடக்கவுள்ளது.

இந்நிலையில் அதை பிரபலப்படுத்துவதற்காக அவர் அளித்த ஒரு நேர்காணலில் “நான் 50 வருடத்துக்கு முன்பு மொசார்ட், பீத்தோவான் பாடல்களை எல்லாம் இப்போது குற்றம்சாட்டி வருகின்றார்கள். நான் உலகத்தில் இப்படியெல்லாம் இசை இருக்கிறது என்று உங்களுக்கு அறிமுகப்படுத்தினேன். உங்களை பயிற்றுவித்தேன். நான் சொல்லவில்லை என்றால் உங்களுக்கு மொசார்ட், பாஹ் பற்றியெல்லாம் தெரியுமா? நான் காப்பி அடித்துவிட்டதாக 50 ஆண்டுகளுக்குப் பின் சொல்கிறார்கள்.” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து நீக்கப்பட்டாரா சிபி சக்ரவர்த்தி?... இணையத்தில் பரவும் தகவல்!