இசைஞானி இளையராஜா தன்னுடைட்ய 82 ஆவது வயதில் இப்போது தன்னுடைய முதல் சிம்ஃபொனியை முடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் தான் சிம்பொனி ஒன்றை உருவாக்கி வருவதாக இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். valiant எனப் பெயரிடப்பட்டுள்ள அவரின் முதல் சிம்பொனியை சமீபத்தில் பதிவு செய்துள்ளார்.
இது இசைக் கலைஞர்களோடு அவர் ஒத்திகைகள் பார்த்த வீடியோ இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றது. விரைவில் இந்த சிம்பொனி இசை கச்சேரி லண்டனில் உள்ள ஒரு இசையரங்கில் நடக்கவுள்ளது. இதனால் அந்த சிம்ஃபொனி பற்றி இளையராஜா சில நேர்காணல்களை அளித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபகாலமாக எல்லாத் துறைகளிலும் AI தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்துவது சம்மந்தமாகப் பேசியுள்ளார். அதில் “AI இன்று எல்லா வேலைகளையும் செய்கிறது. ட்யூன் கொடுக்கிறது. இளைஞர்கள் அதைப் பயன்படுத்துவதால் அவர்களின் கற்பனைத் திறன் முடக்கப் படுகிறது. நான் இப்போது AI உடன்தான் போட்டி போடப் போகிறேன்” எனக் கூறியுள்ளார்.