அர்ப்பணிப்பில் அஜித்தை மிஞ்சும் ஹியூமா குரேஷி - வலிமை படத்தின் சுவாரஸ்ய தகவல்!

வெள்ளி, 20 மார்ச் 2020 (10:28 IST)
நேர்கொண்ட பார்வை  படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து  இயக்குனர் ஹெச். வினோத் மீண்டும் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி வருகிறார். பைக் ரேஸர் மற்றும் போலீஸ் என இரண்டு வெறித்தனமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அஜித். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 
 
இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் துவங்கி விறு விறுப்பாக நடைபெறு வந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. அஜித்திற்கு ஜோடியாக இப்படத்தில் பாலிவுட் நடிகை ஹியூமா குரேஷி நடித்து வருகிறார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வலிமை திரைப்படத்துக்காக புல்லட் ஒட்டி பயிற்சி எடுப்பதாக தெரிவித்து புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். 
ரெட் அண்ட் ப்ளாக் புல்லட்டில் கருப்பு டீ ஷர்ட் பேண்ட் அணிந்துகொண்டு செம்ம சீனாக பைக் ஓட்டிவரும் இந்த புகைப்படம் அஜித் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அஜித்திற்கு நிகராக ஹியூமா குரேஷியின் கதாபாத்திரம் இருக்கும் என சமூகலைத்தளங்கில் பேசப்பட்டு வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் காணாமல் போன நடிகை ஆன்ட்ரியா... மிகுந்த வேதனையில் ரசிகர்கள் - என்ன ஆச்சு? போனாங்க ?