அதுக்குள்ள குழந்தையா... ஷாலு ஷம்மு பதிவிட்ட புகைப்படத்தால் பதறிப்போன ரசிகர்கள்!

வியாழன், 19 மார்ச் 2020 (17:41 IST)
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு காதலியாக நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு. அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் பரவலாக பேசப்பட்டதை அடுத்து  தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், றெக்க, திருட்டுப் பயலே 2 என பல படங்களில் நடித்தார். அதன்பின், அவருக்கு பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.

கடந்த சில நாட்களாக சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த ஷாலு ஷம்மு கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார். ஆம், சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும்  நடிகை ஷாலு ஷம்மு அவ்வப்போது கவர்ச்சியான வீடியோ , புகைப்படங்களை பதிவிட்டு சர்ச்சைகளில் சிக்கி பிரபலமாகி வருகிறார்.


ஆனால்,  தற்போது துளி கூட கவர்ச்சி காட்டாமல் ஒரு கை குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டு குடும்ப குத்து விளக்கு போல போஸ் கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் "அதுக்குள்ள குழந்தையா..? என ஷாக்காகி விட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் விஜய்க்காக போஸ்டர் ஒட்டிய அஜித் ரசிகர்கள்: மதுரையில் கலக்கல்!!