Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தலைவா ஒழுங்கா தமிழில் பேசுங்க.... கொஞ்சம் விட்டா கொன்னு கூறு போட்ருவாங்க!

Advertiesment
தலைவா ஒழுங்கா தமிழில் பேசுங்க.... கொஞ்சம் விட்டா கொன்னு கூறு போட்ருவாங்க!
, வியாழன், 19 மார்ச் 2020 (18:06 IST)
மாஸ்டர் படத்தின் ஆடியோ லான்சில் விஜய் பேசிய கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாகவே மீம்ஸ், வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் உள்ளிட்டவற்றில் பார்க்க முடிகிறது. அதிலும் குறிப்பாக 'kill them with success and bury them with smile'  என்ற அறிவுரை ஒன்றை வழங்கி இருந்தார்.

"நம்மை ஏளனமான பார்ப்பவர்களுக்கு வெற்றி மூலம் பதிலடி கொடுக்க வேண்டும்" என்பது தான்  அதன் அர்த்தம். ஆனால், இந்த அறிவுரையை கூகுளில் தமிழ் ட்ரான்ஸ்லேட் செய்து பார்த்த இணையவாசிகளுக்கு "அவர்களை வெற்றிகரமாகக் கொன்று புன்னகையுடன் புதைக்கவும்" என
வருகிறது.

webdunia

விஜய் சொன்னதற்கும் கூகுள் டிரான்ஸ்லேட் சொல்வதற்கும் கொஞ்சம் கூட தொடர்பில்லாத இந்த அர்த்தத்தை சமூகவலைத்தளங்களில் மீம்ஸ் வெளியிட்டு ட்ரோல் செய்து வருகின்றனர். இதனை கண்ட சிலர் " இனி எதை சொல்லுறதா இருந்தாலும் தெளிவா தமிழிலே சொல்லுங்க தளபதி... விட்ட இந்த பயலுங்க கொன்னு பொதச்சுடுவாங்க போல.... என கிண்டலாக கூறி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதுக்குள்ள குழந்தையா... ஷாலு ஷம்மு பதிவிட்ட புகைப்படத்தால் பதறிப்போன ரசிகர்கள்!