செக்கியூரிட்டி வேலை பார்த்தவர் ஆசிரியர் ஆகிறார்... நடிகர் சதிஷ் பதிவிட்ட வீடியோ!

வியாழன், 19 மார்ச் 2020 (19:30 IST)
விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட இளம் நடிகர்களுடன் நகைச்சுவை கூட்டணி அமைத்து நடித்து வரும் நடிகர் சதீஷ், முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். ஹீரோக்களின் நெருங்கிய நண்பனாக காமெடி செய்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த சதிஷ் தொடர்ந்து புது புது படங்களில் கமிட்டாகி வருகிறார்.

இந்நிலையில் தற்போது தனது அபார்ட்மெண்டில் செக்கியூரிட்டி வேலை பார்க்கும் பாலு சாமி குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, பாலு ஒரு மாதத்திற்கு முன் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு வேலம்மாள் ஸ்கூலில் வேலை செய்யப்போவதாக தெரிவித்திருந்தார்.

அங்கும் செக்யூரிட்டி வேலை தான் பார்க்கப்போகிறார் என்று தான் நான் நினைத்தேன். ஆனால், அவர் அந்த பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றப்போவதாக கூறினார். மிகவும் பெருமையாக இருந்தது. நல்ல முன்னுதாரண மனிதர் நிச்சயமாக நல்ல மாணவர்களை உருவாக்குவார் என அவருடன் சேர்ந்து இந்த வீடியோவை சதிஷ் வெளியிட்டுள்ளார்.

நல்ல முன்னுதாரண மனிதர்

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் குடியும் கூத்துமாக கும்மாளம் போடும் "கேப்மாரி" ஜெய் - வீடியோ!