Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மருத்துவமனையில் தர்மேந்திராவை ரகசியமாக வீடியோ எடுத்த ஊழியர் கைது!

Advertiesment
தர்மேந்திரா

vinoth

, சனி, 15 நவம்பர் 2025 (11:25 IST)
பாலிவுட் மூத்த நடிகரும் பாஜக எம் பி ஹேமமாலினியின் கணவருமான தர்மேந்திரா பாலிவுட் மூத்த நடிகர் தர்மேந்திரா சமீபத்தில் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அவர் இறந்துவிட்டதாக வதந்திகள் உலாவின. ஆனால் அவர் நலமாக உள்ளதாகக் கூறி அவரது குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டனர். தற்போது அவரை வீட்டுக்கே அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் தர்மேந்திரா மயங்கிய நிலையில் இருக்கும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலானது. அதை அனுமதிக்கப்பட்டிருந்த ப்ரீச் கேண்டி மருத்துவமனையின் ஊழியர்கள் ரகசியமாக எடுத்துப் பரப்பியது தெரியவந்தது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் சம்மந்தப்பட்ட ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தி சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக 60 கள் மற்றும் 70 களில் கலக்கியவர் தர்மேந்திரா. அவரும் அமிதாப் பச்சனும் இணைந்து நடித்த ஷோலே திரைப்படம் இந்திய வணிக சினிமாவின் கல்ட் கிளாசிக்காக இன்றளவும் கொண்டாடப்படுகிறது. ஒரு  கட்டத்தில் ஹீரோவாக நடிப்பதைக் குறைத்துக் கொண்ட தர்மேந்திரா குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். இந்தி சினிமாவில் அதிக ஹிட் படங்கள் கொடுத்த நடிகர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் தர்மேந்திரா என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுந்தர் சி வெளியேற்றம்… ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போவது யாராக இருக்கும்?