ரீனாவை காப்பாற்றினாரா தந்தை விஜய்? 'ஹார்ட் பீட் - 2' இணையத்தொடர் இன்றுடன் நிறைவு..!

Mahendran
வியாழன், 6 நவம்பர் 2025 (14:32 IST)
தமிழில் பெரும் வரவேற்பு பெற்ற 'ஹார்ட் பீட் - 2' இணையத் தொடர், தனது 100-வது எபிசோடில் பரபரப்பான திருப்பத்துடன் இன்று  நிறைவடைந்தது.
 
இந்த தொடரில், தாயான ரதியால் குழந்தை பருவத்தில் காப்பகத்தில் விடப்பட்ட மகள் ரீனாவுக்கு விபத்து ஏற்பட்டு, அவசர அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. அப்போது, வழக்கு காரணமாக மருத்துவராக பணியாற்ற முடியாத நிலையில் இருந்த அவரது தந்தையான விஜய் ரீனாதான் தனது மகள் என்ற உண்மையை அறிந்தார்.
 
விஜய் சட்ட சிக்கல்கள் மற்றும் மருத்துவ பணி மீதான தடையையும் மீறி, ரீனாவுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றினார். ரீனா சுயநினைவு திரும்பி முதல்முறையாக விஜய்யை 'அப்பா' என்று அழைக்கிறார். இறுதியில், சட்டத்தை மீறிய குற்றத்திற்காக காவல்துறையினர் விஜய்யை கைது செய்வதோடு 'ஹார்ட் பீட் - 2' தொடர் நிறைவு பெறுகிறது.
 
இந்த தொடரின் அடுத்த பாகம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரீனாவை காப்பாற்றினாரா தந்தை விஜய்? 'ஹார்ட் பீட் - 2' இணையத்தொடர் இன்றுடன் நிறைவு..!

ஊதித் தள்ள நான் மண் அல்ல.. மலை..! கவனம் ஈர்த்த காந்தா பட ட்ரெய்லர்!

12 ஆண்டுகளுக்கு பிறகு கம்பேக் கொடுக்கும் ரோஜா! சிறப்பு வீடியோவை வெளியிட்ட படக்குழு

வித்தியாசமான டிசைனர் ஆடையில் அசத்தல் போஸ் கொடுத்த அதுல்யா ரவி!

கூந்தலலை காற்றிலாட க்யூட் போஸ் கொடுத்த க்ரீத்தி ஷெட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments