துல்கர் சல்மான் நடித்து விரைவில் வெளியாகவுள்ள காந்தா படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனத்தையும், ஆர்வத்தையும் ஈர்த்துள்ளது.
செல்வமணி செல்வராஜ் எழுதி இயக்கியுள்ள படம் காந்தா. இந்த படத்தில் துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ போஸ் என பலர் நடித்துள்ளனர், ஜானு சந்தர் இசையமைத்துள்ளார்.
முழுக்க முழுக்க 1950களில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ள இந்த கதையில் துல்கர் சல்மான், நடிப்பு சக்ரவர்த்தி டி கே மகாதேவன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு பெரிய ஸ்டார் நடிகருக்கும், அவரை வளர்த்துவிட்ட இயக்குனருக்கும் இடையே நடக்கும் மோதலாக உருவாகியுள்ளது இந்த படம்.
முழுவதும் 1950, 60களை நினைவூட்டும் விதமான அரங்க அமைப்புகள், கார்கள், சினிமா படப்பிடிப்பு தளம் என கண்முன்னே ஒரு பெரிய நாஸ்டால்ஜியாவை கொண்டு வந்து நிறுத்துகிறது படத்தின் ட்ரெய்லர். அனைவரது நடிப்பும் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.
சமீபமாக துல்கர் சல்மானின் படத்தேர்வுகள் எதுவும் சோடை போகாத நிலையில் இந்த காந்தாவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் நவம்பர் 14ல் வெளியாகிறது.
Edit by Prasanth.K