ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ திரைப்படமும் தீபாவளிக்கு வருகிறதா?

vinoth
வெள்ளி, 22 ஆகஸ்ட் 2025 (09:58 IST)
ஹேண்ட்ஸம் இளம் நடிகராக கோலிவுட் சினிமாவின் பெண்கள் ரசிகர்களை அடியோடு கவர்ந்திழுத்தவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் அமலா பால் நடிப்பில் வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளான சிந்து சமவெளி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.

அதன் பிறகு பொறியாளன் திரைப்படத்தின் மூலம் ஹீரோவானார். தொடர்ந்து வாய்ப்பில்லாமல் இருந்து வந்த அவர் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு பெரும் பிரபலமானார். மேலும் பியார் பிரேமா காதல் மற்றும் தாராள பிரபு திரைப்படம் அவரது கெரியரில் மைல் கல்லாக அமைந்தது. சமீபத்தில் அவர் நடித்த பார்க்கிங் மற்றும் லப்பர் பந்து ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன.

இந்நிலையில் அவர் நடிப்பில் நீண்டகாலமாக மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் ‘டீசல்’ திரைப்படத்தை தீபாவளியை முன்னிட்டு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. டீசல் படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார். ஏற்கனவே தீபாவளிக்கு ‘பைசன்’ மற்றும் ‘LIK’ ஆகிய திரைப்படங்கள் ரிலீசாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

கூலியில் அமீர்கான் போல.. ‘ஜெயிலர் 2’ படத்தில் ஷாருக்கான்? ஆச்சரிய தகவல்..!

அபிஷேக் பச்சனுடனான பிரிவு! வேறொரு திருமணம்.. கரீஷ்மா கபூர் முதலிரவில் நடந்த மோசமான சம்பவம்

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்.. விஜய், ரஜினிக்கு செஞ்சது போதாதா?

‘அஞ்சான்’ படத்தை கிண்டலடித்த ஆர்ஜே பாலாஜி.. இப்ப வம்புக்கிழுத்த லிங்குசாமி

அடுத்த கட்டுரையில்
Show comments