Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனுஷுக்காகவே பிரத்யேகமான ஒரு கதையை எழுதி வருகிறேன்… லப்பர் பந்து இயக்குனர் கொடுத்த அப்டேட்!

Advertiesment
Vijayakanth blessing

vinoth

, திங்கள், 4 ஆகஸ்ட் 2025 (09:57 IST)
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் கடந்த வருடத்தின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது. அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கிய இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க முக்கிய வேடங்களில் பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் தமிழரசன் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றார். இதனால் அவர் தன்னுடைய இரண்டாவது படத்தில் தனுஷை இயக்கவுள்ளார். இந்த படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்நிலையில் இந்த படம் பற்றி பேசியுள்ள தமிழரசன் பச்சமுத்து “தனுஷை சந்தித்து ஆலோசித்து அவருக்காகவே பிரத்யேகமானக் கதையை நான் உருவாக்கி வருகிறேன். இந்த படம் ‘லப்பர் பந்து’ படத்தை விட சிறப்பாக இருக்கும். இந்த படம் தனுஷ் ரசிகர்கள் மற்றும் பொதுவான சினிமா ரசிகர்கள் என அனைவரையும் ஈர்க்கும்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் முயற்சிக்கிறோம்… விவகாரத்து முடிவைக் கைவிட்ட சாய்னா நேஹ்வால்!