ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில் உருவான பார்க்கிங் படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரித்திருந்தது. இந்த படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் நேற்று அறிவிக்கப்பட்ட 71 ஆவது தேசிய விருதுகள் விழாவில் இந்த படத்துக்கு சிறந்த திரைக்கதை(ராம்குமார் பாலகிருஷ்ணன்) மற்றும் சிறந்த உறுதுணை நடிகருக்கான (எம் எஸ் பாஸ்கர்) விருது ஆகியவை அளிக்கப்பட்டுள்ளன.
இந்த மகிழ்ச்சியான தருணத்தில் பேசியுள்ள இயக்குனர் ராம்குமார் “இந்த படம் ரிலீஸான போது கடுமையான வெள்ளம். அதன் பின்னர் ஓடிடியில் இந்த படம் ரிலீஸாகி இந்தளவுக்கு மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளது மகிழ்ச்சி. எம் எஸ் பாஸ்கர் சார் எல்லா விருதுகளுக்கும் தகுதியானவர். ஆனால் அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற வருத்தம் இருந்தது. அது பார்க்கிங் படம் மூலம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி” எனக் கூறியுள்ளார்.