ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி. குஷ்பு போல பூசினார் போல இருந்த அவரை பலரும் குட்டி குஷ்பு என்றெல்லாம் அழைத்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.
இதனால் உடல் எடையை குறைத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தார். ஆனால், அது தான் அவர் செய்த பெரிய தப்பு. அதன் பின்னர் அவருக்கு படவாய்ப்புகளே வரவில்லை. இருந்தும் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்.
நடிகையாக மட்டும் அல்லாமல் நல்ல மனிதாபிமானத்துடன் இருந்து வரும் ஹன்சிகா இன்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாளை சென்னையில் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அந்த குழந்தைகளுக்கு ஹன்சிகா உணவும், பரிசுப்பொருட்களும் ஏற்பாடு செய்துள்ளார். ஹன்சிகா பம்பாயில் தனது தாய் மற்றும், தான் தத்தெடுத்து வளர்க்கும் குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.