சூர்யா நடித்த சூரரைப்போற்று என்ற திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தில் சிறப்பாக இசையமைத்த ஜிவி பிரகாஷ் அவர்களுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது கிடைத்ததை அடுத்து அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பதாவது:
ஒரு நாள் நீ பெரிதாக சாதிப்பாய்... ஒரு நாள் நீ வெற்றி பெறுவாய்... ஒரு நாள் நாம் நினைத்த வகையில் அனைத்தும் நடக்கும்... நீண்ட நாள் காத்திருப்புக்கு பின் நான் எதிர்பார்த்த இந்த நாள் வந்து விட்டது. இந்த பிரபஞ்சத்துக்கு நன்றி. என் தந்தை வெங்கடேஷ், சைந்தவி, பாவனி, அன்வி ஆகிய என் குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி. சூரரைப்போற்று படக்குழுவினர்களுக்கு எனது நன்றி.
எனக்கு இசையமைக்க வாய்ப்பு கொடுத்த இயக்குனர் சுதா கொங்கரா, சூர்யா, 2டி மற்றும் ராஜசேகர் பாண்டியன் அனைவருக்கும் நன்றி. எனது இசைக்கலைஞர்கள், எனது குழு, சவுண்ட் என்ஜினியர் உள்ளிட்ட அனைவருக்கும் சிறப்பு நன்றி. இந்த நாள் என் வாழ்வின் முக்கிய நாள்” என பதிவு செய்துள்ளார்.