Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எழுத்தாளர் கோணங்கிக்கு தமிழ்நாடு அரசின் ‘இலக்கிய மாமணி’ விருது!

Advertiesment
எழுத்தாளர் கோணங்கிக்கு தமிழ்நாடு அரசின் ‘இலக்கிய மாமணி’ விருது!
, திங்கள், 18 ஜூலை 2022 (15:24 IST)
தமிழ் நாடு அரசின் இலக்கிய மாமணி விருதுக்கு எழுத்தாளர் கோணங்கி அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் இலக்கியத்தில் தனித்துவமான எழுத்து நடையால் வாசகர்களைக் கவர்ந்தவர் கோணங்கி. 1980 களில் இருந்து பல சிற்றிதழ்களில் தொடர்ந்து எழுதிவருகிறார். கல்குதிரை என்ற இலக்கிய சிற்றிதழையும் நடத்தி வருகிறார். பாழி, பிதிரா, த, நீர்வளரி என நான்கு நாவல்களை எழுதியுள்ளார். இவை தவிர சில சிறுகதை தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது அவர் தமிழக அரசின் இலக்கிய மாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று நடக்கும் தமிழ்நாடு நாள் விழாவில் இந்த விருதினை அவர் பெறவுள்ளார். இதையடுத்து அவருக்கு சக எழுத்தாளர்களும், வாசகர்களும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹிட்லர் பயன்படுத்திய கடிகாரம் ஏலம்..! – 31 கோடிவரை ஏலம் போகும் என தகவல்!