Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெண்டில்மேன் 2 படத்தில் இருந்து பிரபல நடிகர் விலகல்!

ஜெண்டில்மேன் 2 படத்தில் இருந்து பிரபல நடிகர் விலகல்!
, செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (09:29 IST)
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடித்து 1993ல் வெளியான திரைப்படம் ஜென்டில்மேன். இது ஷங்கரின் முதல் படமாகும். மதுபாலா, சுபஸ்ரீ, செந்தில், கவுண்டமனி உள்ளிட்ட பலர் நடித்து வெளியான இந்த படம் அப்போதைய காலத்திலேயே பெரும் வெற்றி பெற்றது. புதுமுக இயக்குனர் ஷங்கரை நம்பி அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இந்த படத்தைத் தயாரித்தார் தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன்.

நீண்டகாலமாக படத்தயாரிப்புகளில் ஈடுபடாத அவர் , தற்போது ஜெண்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க இருப்பதாக கே.டி.குஞ்சுமோன் அறிவித்தார். இதற்காக தற்போது “ஜெண்டில்மேன் ஃபிலிம் இண்டர்நேஷனல்” என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன்  மூலமாக தயாரிக்க உள்ளார்.

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்த சரத்குமார் இப்போது போர் தொழில் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அந்த படத்தில் இருந்து விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இது தயாரிப்பாளர் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலா இயக்கும் வணங்கான் திரைப்படத்தில் நீதிபதியாக மிஷ்கின்!