Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அனுஷ்காவின் ரி எண்ட்ரி பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அனுஷ்காவின் ரி எண்ட்ரி பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
, புதன், 16 ஆகஸ்ட் 2023 (07:32 IST)
தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் இவர் தொடர்ந்து நடித்து வந்தார். அந்த மாதிரி கதைக்களங்களில் அவர் நடித்த அருந்ததி, ருத்ரமாதேவி போன்ற படங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது.

கடைசியாக அவர் நடிப்பில் பாகுபலி, இஞ்சி இடுப்பழகி மற்றும் நிசப்தம் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸாகின. அதன் பிறகு தமிழ் படங்களில் அவர் தலைகாட்டவே இல்லை. இந்நிலையில் இப்போது அவர் தெலுங்கில் “மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் பொலிஷெட்டி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 4 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடியாத காரணத்தால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்போது படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 7 ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அனுஷ்காவுடன் இளம் ஹீரோவான நவீன் பொலிஷெட்டி கதாநாயகனாக நடித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெளிநாட்டு திரைப்படவிழாவில் விருது வென்ற துல்கர் சல்மானின் திரைப்படம்!