Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாலா இயக்கும் வணங்கான் திரைப்படத்தில் நீதிபதியாக மிஷ்கின்!

பாலா இயக்கும் வணங்கான் திரைப்படத்தில் நீதிபதியாக மிஷ்கின்!
, செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (09:25 IST)
பாலா இயக்கிய வணங்கான் திரைப்படத்தில் ஒரு கட்டத்தில் சூர்யா விலகிவிடவே, இப்போது அருண் விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் இப்போது முக்கிய வேடத்தில் நடிக்க சமுத்திரக்கனியும் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது வணங்கான் படத்தை இயக்குனர் பாலாவே தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது இயக்குனரும் நடிகருமான மிஷ்கின் வணங்கான் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பாலா தயாரிப்பில் மிஷ்கின் பிசாசு படத்தை சில ஆண்டுகளுக்கு இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்போது வணங்கான் திரைப்படத்தில் மிஷ்கின் நடிக்கும் கதாபாத்திரம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் மிஷ்கின் நீதிபதி வேடத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏ ஆர் ரஹ்மானின் இசைக்கச்சேரி டிக்கெட் விற்பனை 17 கோடி ரூபாயா?