தமிழ் சினிமாவில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வெற்றி பெற்றவர் ஜி வி பிரகாஷ். அவர் இசையமைப்பில் விரைவில் அவரின் 100 ஆவது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நடிகராகவும் 25 படங்கள் என்ற மைல்கல்லை கிங்ஸ்டன் படம் மூலமாக எட்டியுள்ளார்.
இந்நிலையில் இப்போது அவர் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இதற்கிடையில் அவர் இப்போது பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அவர் வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளர்களுக்கு ஒரு அறிவுரை கூறியுள்ளார். அதில் “இளையரா, எம் எஸ் விஸ்வ்நாதன் மற்றும் ஏ ஆர் ரஹ்மான் ஆகியோர் தங்கள் இசையால் தமிழ் சினிமாவுக்கு மரியாதை செய்துள்ளார்கள். அந்த பாரம்பரியத்தை நாம் முன்னோக்கி எடுத்து செல்ல வேண்டும். வெறும் குத்துப்பாட்டு மட்டும் போடும் இசையமைப்பாளராக ஆகிவிடக் கூடாது” எனக் கூறியுள்ளார்.