Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

7 ஜி ரெயின்போ காலணி 2 படத்தில் இருந்து யுவன் விலகலா?

7 ஜி ரெயின்போ காலணி 2 படத்தில் இருந்து யுவன் விலகலா?

vinoth

, திங்கள், 16 செப்டம்பர் 2024 (15:16 IST)
2004 ஆம் வெளியான 7ஜி ரெயின்போ காலணி தமிழ் சினிமாவில் வெளியான மிகச்சிறந்த காதல் திரைப்படங்களில் ஒன்று. அந்த படத்தில் தனது மிகச்சிறப்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தனர் ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால். இந்த படம் செல்வராகவனின் சினிமா கேரியரில் ஒரு மிக முக்கியமான வெற்றிப்படமாக அமைந்தது. யுவன் இசையில் நா முத்துக்குமாரின் பாடல்கள் எவர்கீர்ன் சார்ட்பஸ்டர் ஹிட்ஸ்களாக அமைந்தன.

இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது. இரண்டாம் பாகத்தையும் செல்வராகவனே இயக்க, ரவி கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார். யுவன் இசையமைக்க, அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவாளராக பணியாற்ற ஒப்பந்தம் ஆகினர்.  சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் தொடங்கியுள்ளது. அங்குள்ள ஒரு அபார்ட்மெண்ட்டில் செல்வராகவன் ரவிகிருஷ்ணா நடிக்கும் சில காட்சிகளைப் படமாக்கப்பட்டது. பைனான்ஸ் காரணமாக படம் விட்டு விட்டு ஷூட்டிங் நடக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா விலகியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அதை உறுதிப்படுத்துவது போல ஜி வி பிரகாஷ் செல்வராகவனோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ’ஆயிரத்தில் ஒருவன் மற்றும் மயக்கம் என்ன ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு செல்வராகவனோடு மீண்டும் ஒரு பயணம்’ எனக் கூறியுள்ளார். இதனால் 7 ஜி ரெயின்போ காலணி 2 படத்துக்கு ஜி வி பிரகாஷ்தான் இசையமைக்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘ஹார்ட் டிஸ்க் கிடைச்சிருச்சு… விரைவில் லால் சலாம் ஓடிடி ரிலீஸ்’- ஐஸ்வர்யா ரஜினிகாந்த்