தக் லைஃப் படம் வெளியாகும் சமயத்திலேயே பரமசிவன் பாத்திமா படம் வெளியாவது குறித்து இசை வெளியீட்டு விழாவில் கூல் சுரேஷ் பேசியது வைரலாகியுள்ளது.
இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் விமல், சாயா தேவி, எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்து தயாராகியுள்ள படம் பரமசிவன் பாத்திமா. இந்த படம் ஜூன் 6ம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். இந்த விழாவில் கூல் சுரேஷ் பரமசிவன் கெட்டப்பிலேயே வந்து கலந்துக் கொண்டார்.
அப்போது பேசிய அவர் “டைரக்டர் இந்த படத்தை ஜூன் 5ம் தேதி வெளியிடுவதாக சொன்னார். அன்றைக்குதான் தக் லைஃப் படமும் வெளியாகிறது. அதனால் நான் டைரக்டரிடம் கேட்டேன். கமலுக்கும் விமலுக்கும் போட்டியா? அல்லது எஸ்டிஆருக்கும் கூல் சுரேஷுக்கும் போட்டியா? என் தலைவனுக்கு போட்டியாக நான் வரமாட்டேன் என்று சொன்னேன்.
படத்தை ஒரு நாள் தள்ளி ஜூன் 6ம் தேதி வெளியிடுவதாக சொன்னார்கள். எப்போதுமே வெந்து தணிந்தது காடு, எஸ்டிஆருக்கு வணக்கத்தை போடு. எப்பவுமே நான் ரசிகனாக இங்க இருந்துதான் எஸ்டிஆரை பார்க்கிறேன். நான் கமல் சாரிடம் ஒரு கோரிக்கை மட்டும் வைத்துக் கொள்கிறேன். நீங்கள் இப்போது விண்வெளி நாயகன் ஆகிவிட்டீர்கள். அதனால் உலக நாயகன் பட்டத்தை எங்கள் எஸ்டிஆருக்கு தர வேண்டும்” என்று பேசியுள்ளார்.
Edit by Prasanth.K