Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கமல் சார் கழுத்தை நன்றாக நெரித்துவிட்டேன்! அவரோட ரியாக்‌ஷன்..? - சிம்பு சொன்ன ஷூட்டிங் ஸ்பாட் சம்பவம்!

Advertiesment
Thug Life

Prasanth Karthick

, ஞாயிறு, 25 மே 2025 (10:19 IST)

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டில் பேசிய சிம்பு, ஷூட்டிங்கில் நடந்த சில சுவாரஸ்ய சம்பவங்களை கூறியுள்ளார்.

 

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடித்துள்ள படம் தக் லைஃப். த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் ஜூன் 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் நேற்று தக் லைஃப் ஆடியோ வெளியீடு நடந்தது.

 

அதில் பேசிய சிம்பு ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவங்கள் குறித்து பேசினார். அப்போது அவர் “ட்ரெய்லர்ல நானும், கமல் சாரும் ஒருத்தர் கழுத்தை ஒருத்தர் பிடிச்சிட்டு இருக்க மாதிரி ஒரு சீன் வந்திருக்கும். அந்த சீன் நடிக்க ரொம்ப கஷ்டப்பட்டேன். கமல் சார் கழுத்தை எப்படி நாம பிடிக்கிறது? என்று பயந்து இறுக்கி பிடிச்சிருக்கது போல முகத்துல மட்டும் ரியாக்‌ஷன் கொடுத்தேன்.

 

ஆனால் மணி சார் அதை பாத்துட்டு கட் சொல்லிட்டார், உண்மையாவே நல்லா இருக்கி பிடிங்கன்னு சொன்னார். கமல் சார் என்ன நினைப்பாரோ? அவருக்கு வலிக்குமோன்னு கவலையா இருந்துச்சு. டேக் ஓகே ஆகல. அப்புறம் கமல் சாரே பயப்படாம  லாக் பண்ணி புடிங்கன்னு சொன்னார். நானும் அடுத்த டேக்ல கழுத்தை கொஞ்சம் இறுக்கி புடிச்சிட்டேன். அப்போ கமல் சார் கொடுத்த ரியாக்‌ஷனை பாத்து எனக்கு பயம் வந்திட்டு. உண்மையாவே நாம இறுக்கி புடிச்சிட்டோமா? இல்லைன்னா கமல் சாரோட நடிப்பு அவ்வளவு தத்ரூபமா இருக்கான்னு? புரியாம போச்சு” என்று பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளம்பெண்ணை துரத்தி வெட்டிய முதியவர்.. அலறிக் கொண்டு ஓடிய பெண்! - அதிர்ச்சி வீடியோ!