கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் நீண்ட இடைவேளைக்கு பிறகு இணைந்த 'தக்லைப்' திரைப்படம், ஜூன் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
சிம்பு, திரிஷா மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில், 'சுகர் பேபி' என்ற பாடல் சற்றுமுன் இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ பாடலில் திரிஷாவின் மயக்கம் ஏற்படுத்தும் நடனத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். மேலும், இந்த பாடலில் உள்ள வரிகளை பார்க்கும்போது, அது சுவராசியமாக இருப்பதாகவும், ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
திரிஷா, இந்த வயதிலும் இளம் நடிகைகளுக்கு போட்டியாக செம்மையாக நடனம் ஆடியுள்ளார் என்றும், இந்த படம் நிச்சயம் அவருக்கு மிகப்பெரிய புகழை பெற்றுத்தரும் என்றும் கூறி வருகின்றனர்.
மேலும், “என்ன வேணும் உனக்கு, கொட்டி கொட்டி கிடக்கு” என்ற வரிகளில் திரிஷாவின் அசைவுகள் அந்த பாடல் வரிகளுக்கு ஏற்ப ஒத்துவரும் வகையில் நடன இயக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த பாடலின் முதல் சில வரிகள் இதோ…
என்ன வேணும் உனக்கு
கொட்டி கொட்டி கிடக்குது
இன்னும் என்ன வேணும் உனக்கு
சொர்கம் இங்கு இருக்கு
கள்ளம் உள்ள நெஞ்சு
காதலென்ற நஞ்சு
கண்ணை மூடி கொண்டு
என்னை மட்டும் கொஞ்சு
என்ன வேணும் உனக்கு
கொட்டி கொட்டி கிடக்கு
இன்னும் என்ன வேணும் உனக்கு
சொர்க்கம் இங்க இருக்கு