தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் சேரன். இவர் இயக்கிய பொற்காலம், ஆட்டோ கிராப், தவமாய் தவமிருந்து, பாண்டவர் பூமி போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
 
 			
 
 			
					
			        							
								
																	சமீபகாலமாக சேரன் எப்போது படங்கள் இயக்குவார் என அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
 இதுகுறித்து, சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
தவமாய் தவமிருந்து போன்ற ஒரு படைப்பாகத்தான் விஜய்சேதுபதி அவர்களோடு இணையும் படத்துக்காக முடித்து வைத்திருக்கும் திரைக்கதை. ஏனோ செய்து முடிக்க முடியாமல் தள்ளிக்கொண்டே போகிறது.. அண்ணன்களும் தங்கைகளும் கண்ணுக்குள் வைத்து பாதுகாக்கப்போகும் படம். வழி விடுமா காலம்..என தெரிவித்துள்ளார்.
சேரனின் பதிவிற்கு, அவரது ரசிகர் ஒருவர், காலம்..நேரம் விரைவில் கைகூடும் சார்...கிழக்குசீமையில் உதித்த பாசமலர் போன்ற படைப்பாக வரப்போகும் அவ்வுயர் படைப்பிற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் சார்..