பிரபல நடிகர் மோகன்லாலுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சமூகவலைதளங்களில் மர்ம நபர்கள் சிலர் வதந்தி பரப்பி உள்ளதை அடுத்து போலீசார் அந்த நபர்களை தேடிவருகின்றனர். இதுகுறித்து கேரளாவில் வைரலாகும் ஒரு வீடியோவில் நடிகர் மோகன்லாலுக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும், இதனையடுத்து அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் மர்ம நபர்கள் சிலர் தெரிவித்துள்ளனர் இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தது மட்டுமன்றி கேரள அரசும் கடும் அதிர்ச்சியடைந்தது
இந்நிலையில் இது குறித்த முதல் கட்ட விசாரணையில் ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்திற்காக அந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த வதந்தியை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்து அந்த நபர்களை தேடி வருகின்றனர். வெகு விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள் என்று போலீசார் கூறியுள்ளனர்
இந்த நிலையில் கொரோனா குறித்து வதந்தி பரப்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.