Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தன் முகத்தை மார்பிங் செய்து ஆபாச வீடியோ வெளியிட்டவனுக்கு அல்டிமேட் பதிலடி கொடுத்த லாஸ்லியா....!

Advertiesment
தன் முகத்தை மார்பிங் செய்து ஆபாச வீடியோ வெளியிட்டவனுக்கு அல்டிமேட் பதிலடி கொடுத்த லாஸ்லியா....!
, சனி, 4 ஏப்ரல் 2020 (10:44 IST)
கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களை ஒருவரான லாஸ்லியாவுக்குத்தான் முதன் முதலாக ஆர்மி தொடங்கப்பட்டது. லாஸ்லியாவின் ஆர்மி அவரது புகழை பாடிக்கொண்டு லாஸ்லியாவை தினந்தோறும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆக்கிக் கொண்டிருந்தனர். இலங்கையில் செய்திவாசிப்பாளராக இருந்த இவர் தமிழ் இளைஞர்களின் கனவுக்கன்னியாக மாறிவிட்டார்.

பிக்பாஸில் லாஸ்லியா- கவின் காதல் தான் சூடு பிடித்து நிகழ்ச்சியை ஸ்வாரஸ்யமாக எடுத்து சென்றது. இவர்களின் காதலுக்கு அவர்களது ஆர்மிஸ் பெரும் ஆதரவு கொடுத்தனர். பின்னர் இந்நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.  இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் லாஸ்லியாவின் ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் கசிந்து தீயாக பரவி வைரலானது.     ஆனால், வெறும் பொய்யான வீடியோ மற்றும் அதில் லாஸ்லியாவின் முகத்தை மார்பிங் செய்து கீழ்த்தறமாக நடந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ள லாஸ்லியா பொய்கள் நிறைந்த இந்த உலகில், நம் அனைவருக்கும் நம் வாழ்வில் சில பிரகாசங்கள் இருக்கிறது. ஆனால்,  ஒரு கட்டத்தில் நாம் நமக்குள்  உள்ள  ஆத்மாக்களுடன் மட்டுமே தனியாக இருக்கிறோம் என்பதை உணர்கிறோம். உலகம் அச்சம் மற்றும் நிறைய எதிர்மறை தீர்ப்புகளால் கிடக்கிறது. எனவே மக்கள் மகிழ்ச்சியாக மாறத் தொடங்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்ற குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சும்மா இருக்குற புள்ளிங்களை சீண்டிவிடும் சாக்ஷி அகர்வால்... ஏக்கத்தில் பரிதவிக்கும் சிங்கிள்ஸ்!