முதல்முறையாக மெட்ரோ செட் போட்ட ‘மாஸ்டர்’ படக்குழு!

ஞாயிறு, 23 பிப்ரவரி 2020 (17:19 IST)
முதல்முறையாக மெட்ரோ செட் போட்ட ‘மாஸ்டர்’ படக்குழு!
தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகி வரும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் இன்னும் பத்து நாட்களில் முடிவடைந்துவிடும் என்று படக்குழுவினர் தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.
 
இந்த நிலையில் இந்த படத்தின் கலை இயக்குனர் சதீஷ்குமார் சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘தமிழ் சினிமாவிற்காக முதல்முறையாக சென்னை மெட்ரோ ரயில் செட் போடப்பட்டது ‘மாஸ்டர்’ படத்திற்காக தான் என்று கூறியுள்ளார். இந்த படத்திற்காக தான் சுமார் 15 செட்டுக்கள் போட்டதாகவும் அவற்றில் மெட்ரோ ரயில் நிலைய செட் தான் ஸ்பெஷல் என்றும் அவர் கூறினார். 
 
மெட்ரோ ரயில் நிலையத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி உண்டு எனினும் விஜய், விஜய்சேதுபதியை வைத்து மெட்ரோ ரயிலில் படமாக்கினால் ரசிகர்களின் கூட்டம் கூடிவிடும் என்பதற்காக செட் போட்டதாக தெரிகிறது.
 
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ‘இந்தியன் 2’ விபத்துக்கு இதுதான் காரணம்: இயக்குனர் அமீர் பகீர் பேட்டி