பாஜ்கவுக்கு நடிகர் விஜய்யை கண்டால் ஒரு அச்சம் உண்டு என இயக்குனரும் நடிகருமான அமீர் பேட்டியளித்துள்ளார்.
ஆம், இயக்குனரும் நடிகருமான அமீர் சமீபத்திய டிவி சேனல் பேட்டி ஒன்றில், நடிகர் விஜய்யை பாஜக ஒருபோதும் நம்பாது. நடிகர் விஜய்க்கு இருக்கும் மக்கள் செல்வாக்குதான் இதற்கு காரணம். அவருக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கால்தான் பாஜகவுக்கு அவர் மீது பயமே ஏற்படுகிறது.
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துவிட்டால் நம்முடைய திட்டம் தவிடுபொடியாகுமோ என்கிற அச்சம். ஒருவேளை நடிகர் விஜய் பாஜக ஆதரவாளராக மாறிவிட்டால் வருமானவரித் துறை ரெய்டு உள்ளிட்டவை மாறும். இப்ப பேசுகிற வாய்கள் அப்போது மாற்றிப் பேசும் என தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே விஜய்க்கும், பாஜகவினருக்கும் இடையே சிறு சிறு மோதல்கள் ஏற்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. விஜய் தனது படங்களில் பேசும் வசனங்கள் பாஜகவை தாக்குவதாக உள்ளதாக கூறப்படும் நிலையில் சில நாட்களுக்கு முன்பு விஜய் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை செய்த போது நடிகர் விஜய்யை பழிவாங்க பாஜக இதுபோன்ற ரெய்டுகளை செய்வதாக சமூக வலைதளங்கள் முதற்கொண்டு பலவற்றிலும் பேசப்பட்டது.
அதற்கு ஏற்றார்போல் ரெய்டு முடிந்து நெய்வேலியில் படப்பிடிப்பு விஜய் சென்ற போது அங்கு சில பாஜக தொண்டர்கள் படப்பிடிப்பு நடத்தக் கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு விஜய் ரசிகர்கள் அதிகளவில் அங்கு கூடியதாலும், முறையாக படப்பிடிப்பு அனுமதி பெற்றிருந்ததாலும் படப்பிடிப்பு எந்த தடையுமின்றி தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.