இன்னைக்கு செகண்ட் சிங்கிள் அப்டேட் நண்பா! – விஜய் ரசிகர்கள் உற்சாகம்!

ஞாயிறு, 23 பிப்ரவரி 2020 (11:09 IST)
விஜய் நடித்து வெளியாகவிருக்கும் மாஸ்டர் படத்தின் இரண்டாவது சிங்கிள் முக்கிய தகவல் இன்று மாலை வெளியாவதால் ரசிகர்கள் தீவிர எதிர்பார்ப்பில் உள்ளனர்.

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் திரைப்படம் ‘மாஸ்டர்’. இந்த படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான குட்டி ஸ்டோரி பாடல் வெளியான நாளிலிருந்து இதுவரை 21 மில்லியனுக்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டு ஹிட் ஆகியுள்ளது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் இரண்டாவது சிங்கிள் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாவதாக பட தயாரிப்பு நிறுவனமான XB Films தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளது. இதனால் மாஸ்டர் செகண்ட் சிங்கிள் குறித்த ஹேஷ்டேகுகளை இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் அவ்வளவு அசால்ட்டா படத்தில் நடிக்க ஓகே சொல்ல மாட்டார் விஜய் - தளபதி 65 பின்னனி!